கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி (வியாழக்கிழமை) சார் ஆட்சியர் அலுவலகத்தில வைத்து நடைபெறவுள்ளது.
கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார், ஒட்டப்பிடாரம் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து உரிய தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு சார் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


