தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக அல் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசல் முன்பாக வைத்து மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மற்றும் மதரசா மாணவ மாணவிகளின் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துங்கநல்லூர் கிளைத் தலைவர் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சாதிக் முன்னிலை வகித்தார்.மாவட்ட பேச்சாளர் மஹ்பூப் சுப்ஹானி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் மதரசா மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி திருக்குர்ஆன் மளன போட்டி உரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாநில பேச்சாளர் லுக்மான் தாவூதி மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்துங்கநல்லூரில் நாய்கள் அதிகமாக இருப்பதினால் அதனை கட்டுப்படுத்த கோரி செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை வலியுறுத்தியும்,
திருச்செந்தூர்to பாலக்காடு to திருச்செந்தூர் ரயிலை திருவைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்றது போல் சோதனை அடிப்படையில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல இக்கூட்டத்தின் வாயிலாக தெற்கு ரயில்வே கேட்டுக்கொள்கிறோம். இதில் கிளைச் செயலாளர் அப்துல் காதர் கிளை பொருளாளர் கரீம் பாஷா துணைத் தலைவர் வாசிம் நவ்ஃபல் அலியார் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.இறுதியாக
துணைச் செயலாளர் அப்துல் கனி நன்றி கூறினார்


