தலைமகள் பத்திரிக்கைசெய்தி ஆசிரியர் பழனி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மருதூர் கீழக்காலில் இருந்து சிவகளை, பேரூர்,பெருங்குளம் உள்பட குளங்களுக்கு பைபாஸ் கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பத்மநாப மங்கலம் ஊராட்சியில் உள்ள செல்வவிநாயகர் கோயிலுக்கு செல்லும் இடத்தில் கால்வாய் வெட்டப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 23 வருடகாலமாக இந்த பாலத்தின் வழியாகத்தான் கோயிலுக்கு, அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளுக்கும் எங்கள் மக்கள் சென்று வந்தனர். தற்போது இந்த பாலம் உடைந்து விட்டது. இதனால் மக்கள் கோயிலுக்கும் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு சென்று வர இயலவில்லை. இந்த பகுதியில் உள்ள பைபாஸ் வாய்க்காலும் தூர்ந்து விட்டது. இதுகுறித்து பல முறை புகார் அளித்து வந்தேன். இந்த இடத்துக்கு வந்த அதிகாரிகள் பாலத்தினை பார்வையிட்டு சென்றனர். ஆனால் அதை சீர் செய்யவில்லை. தற்போது இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பாலத்தை கடந்து இப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பொது மக்கள் அனைவரும் கோவில் மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று வர இயலவில்லை. எதுவும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்குள் இந்த பாலத்தினை புதிதாக கட்டி தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பாரா? என இந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


