நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்தார்.துணைத் தலைவர் அருண் சாமுவேல் முன்னிலை வகித்தார்பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் வரவேற்றார். இதில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொண்ணா டை பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் . முன்னாள் பஞ் தலைவர் ரவி செல்வக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் துப்புரவு ஊழியர்கள் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


