தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
வங்க கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் இடையிடையே 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


