2வருடம் கழித்து வருகிற 15 ந்தேதி திருச்செந்தூர் & பழனி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் முன்பு பாஸஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. கடந்த கொரோனா காலத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த ரயில் வருகிற 15 ந்தேதி விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 6.40 மணிககு பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி பழனி வழியாக 3.45க்கு திருச்செந்தூரை வந்தடைகிறது. , மற்றொரு தடத்தில் மதியில் 12.5ககு கிளம்பி இரவு 8 மணிககு பொள்ளாச்சியை சென்றடைகிறது. இந்த விரைவு ரயில் திருச்செந்தூர் விரைவு ரயில் நின்று செல்லும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என இரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த ரயிலில் சாதாரண பயணிகளுக்கான பெட்டியும் இணைக்கப்படவில்லை இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் கூறும் போது, செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாகும். இந்த இரண்டு ரயில் நிலையத்தில் கிராஸிங் ரயில்கள் நின்று செல்லும் வசதியும் உள்ளது. முன்பதிவு வசதியும் உள்ளது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலும் நின்று செல்கிறது. அப்படி இருக்கும் போது செய்துங்கநல்லூரையும் ஸ்ரீவைகுண்டத்தினையும் புறக்கணிப்பது வேதனைக்குரிய விஜயமாகும். எனவே எங்கள் ஊரில் 15 ந்தேதி ரயில் நிற்கவில்லை என்றால் பொதுமக்களை கூட்டி செய்துங்கநல்லூர் ரயில் நிலையில் பழனி ரயிலை மறிப்போம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களுக்கு செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறியுள்ளார்.


