இசவன்குளத்தில் வீட்டின் கூரையை சீரமைக்கும் போது மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலை. இவர் கட்டிடத்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் மேற்கூரை சேதமடைந்திருந்ததை சீரமைக்கும் பணியில் சுடலை ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை வீட்டை சீரமைத்துக்கொண்டிருந்த சுடலை மீது விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


