தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் புத்தாடை வழங்கினார்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் சென்று அங்குள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தீப ஒளி திருநாளை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியதுடன் மேலும் அங்கே குடும்பத்துடன் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


