தோட்டக்கலைத்துறை சார்பில் ஆழ்வை இந்து மேல்நிலைப் பள்ளியில் 400 மூங்கில் கன்றுகள் நடும் விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய மூங்கில் இயக்கம் திட்டத்தின் மூலம் ஆழ்வை இந்து மேல்நிலைப்பள்ளியில் 400 மூங்கில் கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளி தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஆழ்வை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது ஆஷீப் வரவேற்றார். பள்ளி செயலாளர் ஆதிநாதன், தலைமையாசிரியர் ராமசாமி, என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர ராமன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மூங்கில் கன்றுகளை நட்டினர். ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர் யுவராஜ் செய்திருந்தார்.


