குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 03.10.2024 அன்று கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 12.10.2024 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 13.10.2024 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்.
இத்திருவிழாவின் மேற்படி முக்கிய நிகழ்வு நடைபெறும் நாட்களான 11.10.2024, 12.10.2024 மற்றும் 13.10.2024 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள். (DIVERSION ROUTE)
1.திருச்செந்தூரிலிருந்து குலசேகரபட்டினம் ECR வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும், குலசேகரபட்டினம் திருவிழாவிற்கு வராத மற்ற வாகனங்கள் அனைத்தும், குலசேகரபட்டினத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில், அவைகள் திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், மணிநகர் மார்க்கமாக மணப்பாடு, பெரியதாழை வழியாக கன்னியாகுமரி செல்லவும் அல்லது சாத்தான்குளம், திசையன்விளை மார்க்கமாக உவரி வழியாக கன்னியாகுமரி செல்லவும்.
2. கன்னியாகுமரி, உவரி, பெரியதாழை, மணப்பாடு, ECR வழியாக குலசேகரபட்டினம் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும், குலசேகரபட்டினம் திருவிழாவிற்கு வராத மற்ற வாகனங்கள் அனைத்தும், குலசேகரன்பட்டினத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பெரியதாழை ECR வழியாக படுக்கப்பத்து, மணிநகர், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்லவும் அல்லது கன்னியாகுமரி, உவரி, திசையன்விளை, சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் செல்லவும்.
அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்.
திருநெல்வேலி – தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும், திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேல ரதவீதி, முருகாமடம் சந்திப்பு (தெப்பகுளம்), ஆலந்தலை, கல்லாமொழி வழியாக குலசேகரபட்டினம் வடக்கூர் ECR பைபாஸ் வந்து குலசேகரபட்டிணம் ஊருக்குள், வடக்கு பகுதியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகியம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக திருச்செந்தூர் முருகாமடம் வந்து அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருச்செந்தூர் பேருந்து நிலையம் செல்லவும்.
மேலும் இவ்வழித்தடத்தில் பேருந்துகளில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குலசேகரபட்டிணம் வடக்கூர் ECR பைபாஸ் சாலையில் இறங்கி, ECR ரத்தினகாளியம்மன் கோவில் தெரு வழியாக கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லலாம். அல்லது தற்காலிக பேருந்து நிலையத்தில் (அறம்வளர்த்தநாயகியம்மன் கோவில்) இறங்கி பெருமாள் கோவில், கீழத்தெரு (யாதவர் தெரு), கருங்காளியம்மன் சந்நதி தெரு, கருங்காளியம்மன் கோவில் தெரு, திருவருள் பள்ளி வழியாக கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லலாம்.
2. திசையன்விளை – தட்டார்மடம் – சாத்தான்குளம் – மெஞ்ஞானபுரம் மார்க்கத்திலிருந்து குலசேகரபட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக தேரியூர் ஊருக்குள் வந்து, செட்டியாபத்து – கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் ECR பைபாஸ் சந்திப்பு தருவைகுளம் அருகில் கொட்டங்காடு ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது கொட்டங்காடு வழியாக உடன்குடி சென்று மற்ற ஊர்களுக்கு செல்லவும்.
3. கன்னியாகுமரி – உவரி, பெரியதாழை, மணப்பாடு மார்க்கமாக வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் குலசேகரபட்டினம் தெற்கு பகுதி ECR பைபாஸ் சாலை தீதத்தாபுரம் சந்திப்பு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு குலசேகரன்பட்டினம் உடன்குடி சாலையில் தருவைகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 19 வாகன நிறுத்தங்களும் மற்றும் குலசேகரபட்டினம் ECR மணப்பாடு சாலையில் 11 வாகன நிறுத்தங்களும், குலசேகரபட்டிணம் வடக்கூர் ECR Bye Pass சாலையில் 1 வாகன நிறுத்தமும் ஆக மொத்தமாக 31 வாகன நிறுத்தங்களும், (Parking Places) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் மேலும் கூடுதலாக 2 வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் (Parking) ஏனோ, தானோ என்று வாகனங்களை நிறுத்தாமலும், வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும், மற்ற வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தூத்துக்குடி சாலை மார்க்கமாக வந்து திரும்பி செல்லும் வாகனங்கள்.
1) தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், மேலரதவீதி, முருகாமடம் (தெப்பக்குளம்) வழியாக பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பராதெரு சந்திப்பு வந்து, பின்பு உடன்குடி RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக, உடன்குடி சிதம்பரா தெருவிலிருந்து வடக்கு காலான் குடியிருப்பு வழியாக உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
2) மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் தருவைக்குளத்தை சுற்றி குலசேகரன்பட்டினம் ECR பைபாஸ் கருங்காளியம்மன் ஜங்ஷன் வந்து குலசேகரன்பட்டினம் வடக்கூர் ECR பைபாஸ், கல்லாமொழி, ஆலந்தலை, திருச்செந்தூர் முருகாமடம் (தெப்பகுளம்), திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம், இராணி மஹாராஜபுரம் வழியாக அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும். அல்லது அம்மன்புரம், ஆறுமுகநேரி, DCW, ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும்.
மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக ஆலந்தலையிலிருந்து முத்தையாபுரம் விலக்கு, செந்தூர் மினரல்ஸ் (பரமன்குறிச்சி ரோடு சந்திப்பு), நடுநாலு மூலைக்கிணறு விலக்கு வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம் வந்து இராணி மஹாராஜபுரம் வழியாக அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும். அல்லது அம்மன்புரம், ஆறுமுகநேரி, ECR , ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும்.
திருநெல்வேலி சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
1) திருநெல்வேலி மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் குரும்பூர், நல்லூர் விலக்கு, காந்திபுரம் வந்து வலதுபுறமாக திரும்பி காயாமொழி விலக்கு, பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பராதெரு சந்திப்பு வந்து பின்பு உடன்குடி RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக உடன்குடி சிதம்பராதெருவிலிருந்து வடக்கு காலான்குடியிருப்பு வழியாக உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
2) மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும் போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் தருவைக்குளத்தை சுற்றி குலசேகரன்பட்டினம் ECR பைபாஸ், கருங்காளியம்மன் கோவில் ஜங்ஷன் வந்து குலசேகரன்பட்டினம் வடக்கூர் ECR பைபாஸ், கல்லாமொழி, ஆலந்தலை, திருச்செந்தூர் முருகாமடம் (தெப்பகுளம்), திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம், இராணி மஹாராஜபுரம், அம்மன்புரம், நல்லூர் விலக்கு, குரும்பூர் வழியாக திருநெல்வேலி செல்லவும்.
மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக ஆலந்தலையிலிருந்து N.முத்தையாபுரம் விலக்கு, செந்தூர் மினரல்ஸ் (பரமன்குறிச்சி ரோடு சந்திப்பு), நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம் வந்து இராணிமஹாராஜபுரம், அம்மன்புரம், நல்லூர் விலக்கு, குரும்பூர் வழியாக திருநெல்வேலி செல்லவும்.
மெஞ்ஞானபுரம் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்
1) மெஞ்ஞானபுரம் மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் செட்டியாபத்து – கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக வந்து குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
2) மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் கொட்டங்காடு, தாங்கையூர் கைலாசபுரம், தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக செட்டியாபத்து அல்லது வேப்பங்காடு வழியாக மெஞ்ஞானபுரம் செல்லவும்.
சாத்தான்குளம் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்
1) சாத்தான்குளம் மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பன்னம்பாறை, வேப்பங்காடு, தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக தேரியூர் ஊருக்குள் வந்து, செட்டியாபத்து – கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
2) மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் கொட்டங்காடு, தாங்கையூர் கைலாசபுரம், தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி, வேப்பங்காடு, பன்னம்பாறை வழியாக சாத்தான்குளம் செல்லவும்.
திசையன்விளை சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்
1) திசையன்விளை மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தட்டார்மடம், காந்திநகர், மணிநகர், பள்ளக்குறிச்சி, ராமசாமி தர்மாபுரம் விலக்கு, கந்தபுரம் விலக்கு, மூன்றுபனை சந்திப்பு (வேதக்கோட்டை விளை ரோடு), தீதத்தாபுரம் விலக்கு வழியாக வந்து குலசேகரன்பட்டினம் ECR மணப்பாடு சாலையிலுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Places) வாகனங்களை நிறுத்தவும்.
மேற்கண்ட வாகனங்கள் நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் தீதத்தாபுரம் விலக்கு, மூன்றுபனை சந்திப்பு (வேதக்கோட்டை விளை ரோடு), கந்தபுரம் விலக்கு, ராமசாமி தர்மாபுரம் விலக்கு, பள்ளக்குறிச்சி, மணிநகர், காந்திநகர், தட்டார்மடம் வழியாக திசையன்விளை செல்லவும்.
கன்னியாகுமரி – உவரி சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள்
1) கன்னியாகுமரி மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் உவரி, பெரியதாழை, மணப்பாடு வழியாக குலசேகரபட்டினம் ECR மணப்பாடு சாலையிலுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (Parking Place) வாகனங்களை நிறுத்தவும்.
2) மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் மணப்பாடு, பெரியதாழை, உவரி வழியாக கன்னியாகுமரி செல்லவும்.
தசரா குழுக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் மற்றும் கடற்கரை சென்று திரும்பும் வழிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள்
1. கோவிலுக்கு வரும் தசரா குழுக்கள் ஒரு வழிப்பாதையாக குலசேகரபட்டினம் ECR பைபாஸ் ரோடு, கருங்காளியம்மன் கோவில் சந்திப்பு, தாயம்மாள் பள்ளி சந்திப்பு, போஸ்ட் ஆபீஸ் வழியாக கோவில் முன்பகுதி வந்து கோவிலுக்கு செல்வும். கடற்கரைக்கு செல்பவர்கள் கோவில் முன் பகுதி வழியாக மடப்பள்ளி வந்து கோவில் கிழக்கு பகுதி வழியாக கடற்கரைக்கு செல்லவும்.
மேலும் தீச்சட்டி எடுத்து வரும் பக்தர்கள் நேராக மடப்பள்ளி, கோவில் கிழக்கு பகுதி வழியாக கடற்கரை பூங்கா அருகிலுள்ள தீச்சட்டி வைக்கும் பகுதிக்கு செல்லவும்.
2. கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஒரு வழிப்பாதையாக குலசேகரன்பட்டினம் ECR, பைபாஸ் சந்திப்பு ரத்தினகாளியம்மன் கோவில், திருவருள்பள்ளி, தெற்கு தெரு, காவலர் குடியிருப்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக கோவில் முன்பகுதி வந்து கோவில் தரிசனத்திற்கோ அல்லது கடற்கரைக்கோ செல்லவும்.
3. கோவில் தரிசனம் முடித்து வெளியே செல்லும் பக்தர்கள் கோவில் மேற்கு பக்க வாசல் (ஆர்ச்) வழியாக வெளியே வந்து, காவல் நிலையம், சகாயம் பெட்ரோல் பல்க் (இந்தியன் ஆயில்) வழியாக குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ரோடு சந்திப்பு வந்து செல்லவும்.
4. கடற்கரையிலிருந்து வெளியே செல்லும் பக்தர்கள் சிதம்பரேஸ்வரர் கோவில், ரைஸ்மில் ஜங்ஷன், கச்சேரி தெரு, குலசேகரன்பட்டினம் காவல் நிலையம், சகாயம் பெட்ரோல் பல்க் (இந்தியன் ஆயில்) வழியாக குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ரோடு சந்திப்பு வந்து செல்லவும் அல்லது குலசேகரன்பட்டினம் தெற்கு பகுதிக்கு செல்பவர்கள் ரைஸ்மில் ஜங்ஷனிலிருந்து மீன் கடை பஜார், அசன்யா பள்ளி ஜங்ஷன் வழியாக வந்து குலசேகரன்பட்டினம் ECR தெற்கு பைபாஸ் மணப்பாடு சாலைக்கு செல்லவும்.
அனைத்து பக்தர்களும், பொதுமக்களும் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், நடத்திட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.