
தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தக கண்காட்சி திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த புத்தகத் திருவிழாவில் நேற்று மங்கல இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் விஜயமூர்த்தி என்பவர் மங்கல இசை நிகழ்த்தினார்.
அதற்காக மேடையில் நாதஸ்வாரம் வாசித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி விஜய மூர்த்தி அவர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது.
நான் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வசித்து வந்தேன். எனது பெற்றோர்கள் ஜனார்தனம் ரெங்கநாயகி. இவர் 9 வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் பயிற்சிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக தற்போது திரைத்துறையில் நடிகையாக வலம் வரும் தீபா அவர்கள் நாட்டியம் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் இவரது மூத்த சகோதரி சுகந்தியும் தேவாரம் படிக்க சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற விஜயமூர்த்திக்கு நாதஸ்வரம் படிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே தனது பெற்றோர்களிடம் விருபத்தினை தெரிவித்தார். எனவே இவரை நாதஸ்வரம் பயில அனுப்பி வைத்தனர்.
அங்கு 3 வருடம் நாதஸ்வரம் படித்தார். தொடர்ந்து நாலாவது வாரமாக தேவராத்தினை முதல் பாடமாகவும், நாதஸ்வரத்தினை துணைப்பாடமாக கொண்டு பயின்று வந்தார்.
இவருக்கு நையாண்டி மேளம் இசைப்பதில் உடன் பாடு இல்லை. எனவே சிக்கல் சென்று அங்குள்ள சிங்காரவேலன் கோயிலில் நாதஸ்வர கலைஞராக வேலைக்கு சேர்ந்தார். அங்கே இசை ஆசிரியர் எஸ்.வி. உத்திராபதி அவர்களிடம் மேலும் நாதஸ்வரம் இசை கற்றுக்கொண்டார்.
இதற்கிடையில் இவருக்கு வருவாய் துறையில் வேலை கிடைத்தது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்று செய்துங்கநல்லூரில் பணியாற்றி வருகிறார்கள். வேலைப்பளு காரணமாக தற்போது நாதஸ்வரம் இசைக்க முடியாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும் போது நாதஸ்வர கச்சேரி நடத்த தவறுவது இல்லை.
இவருக்கு துளசி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். தற்போது செய்துங்கநல்லூரில் வசித்து வருகிறார்.
மேடையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் நாதஸ்வாரம் இசைத்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ரசிப்பையும் ஏற்படுத்தியது.