ஆறுமுகநேரி அருகே உறவினரின் வீட்டில் ரூ.40ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, ராஜமன்னியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் மகன் தர்மராஜ குரு (23) என்பவரது வீட்டிற்கு கடந்த 7ஆம் தேதி இவரது உறவினரான ஆழ்வார்திருநகரி மணல்குண்டு பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் முருகன் (28) என்பவர் தர்மராஜ குருவின் வீட்டில் இருந்த ரூ.40ஆயிரம் மதிப்பிலான செல்போனை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து தருமராஜ குரு அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபா குமார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து செல்போனும் மீட்கப்பட்டது.


