ஸ்ரீவைகுண்டம் யாதவர் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு மாநாடு நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்குக் கந்தசாமி, உலகம்மாள் நினைவருகில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தலைமை குழுவிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், கிரேஸி, பாலம்மாள் தேந்தெடுக்கபட்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் சுவாமிதாஸ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாத்துரை துவக்க உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
புதிய ஒன்றிய குழு உறுப்பினர்களாக நம்பிராஜன், பொன்ராஜ். சுவாமிதாஸ், கிரேஸி, பாலம்மாள், ராமலிங்கம், கருப்பசாமி, கருப்பசாமி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நம்பிராஜன் ஒன்றிய செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் நிறைவுரை ஆற்றினார்.
மாநாட்டில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்களை நியமிக்கவும், ஏரல் சாயர்புரம். திருவைகுண்டம் பகுதிகளில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடவும், திருவைகுண்டம், ஏரல், சாயர்புரம் பகுதி பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


