தூத்துக்குடியில், கள் இறக்க அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டை அணியாமல் பானையுடன் போராட்டம் நடத்த முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில், கள் இறக்க அனுமதி கோரி அனைத்திந்திய காமராஜர் கட்சி நிறுவனத் தலைவர் குளச்சல் ராஜாசிங் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டை அணியாமல், பானையுடன் போராட்டம் நடத்த முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி, பானையை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டை அணிந்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


