தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்து ஊருக்கு புகுவதற்கு காரணம் ஆற்றில் அதிகமாக வளர்ந்து நிற்கும் முள்செடி புதர்களே. எனவே இந்த முள்செடி புதரை அகற்ற தமிழக அரசுவுக்கு பல கோரிக்கை எழுந்து வந்தது. தூததுக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக அகரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி,ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்றுப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆற்று கரைகள் உடைந்து விட்டது. இதை சீரமைக்க பொதுப்பணித்துறையினர்நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் , தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியுள்ளது. கடந்த (2.02.2025) ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் இருந்து ஆற்றுக்கரைக்குள் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மேற்பார்வையில் துவங்கியது.
ஸ்ரீவைகுண்டம் & ஆழ்வார்திருநகரி இடையே உள்ள தாமிரபரணி ஆற்றில் முள்செடிகளை அகற்றி மாடல் தாமிரபரணியாக மாற்றி மரங்களை வளர்க்க வேண்டும் என உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சிக்காக ஸ்ரீவைகுண்டம் வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத்திடம் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமரா-சு ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் எக்னரோ வாடகை இல்லா இயந்திரம் மூலம் மாவட்ட ஆட்சியர் நிதி உதவியுடம் இணைந்து மீண்டும் முள்செடிகளை அகற்றும் பணியை துவங்க உத்தரவிட்டார். இந்த பணி ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி, மற்றும் ஸ்ரீபராசங்கு நல்லூர் பகுதியில் நடந்தது. இந்த பகுதியில் மிக அதிகமான முள்செடிகள் பிடிங்கி வைக்கப்பட்டடுள்ளது. இந்த செடிகள் மழை வெள்ளம் வந்தால் , வெள்ளத்தில் அடித்து சென்று பாலங்களில் தேங்கி விடும். இதனால் பாலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் சார்பில் இந்த முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சுமார் 50க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முள்செடிகளை ஒரிடத்தில் கூட்டி வைத்து அதை எரித்து சாம்பாலாக்கி விட்டால் பாதிப்பு ஏற்படாது என்பதால் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பணியை கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் சித்திரை உள்பட பலர் கலந்துகொண்டனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படை நிலைய பொறுப்பாளர் முத்து தன்னார்வலருக்கு ஆலோசனை வழங்கினார்.


