தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், கீழ காந்தி நகரை சேர்ந்தவர் சடையப்பன் மகன் மணிகண்டன் (45). தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் திருச்செந்தூர் வந்துள்ளார். பின்னர் விருதுநகர் செல்வதற்காக தூத்துக்குடி புதிய துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
முடுக்கு காடு அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


