செய்துங்கநல்லூரில் மின்தடை ஏற்படாமல் பணி செய்ததோடு மட்டுமல்லாமல்
கூடுதலாக மின் மாற்றி அமைக்கவும், மழை வெள்ளத்தின் போது மிகச்சிறப்பாக செயல்பட்டு, உடனடியாக மின் இணைப்பு கொடுத்தவரும், பல வருடங்களாக நடைபெறாமல் இருந்த பணிகளை சிரமமெடுத்தும் செய்து வரும் உதவி மின்பொறியாளர் சுரேஷ் குமார் அவர்களை பணி மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடைவடிக்கை எடுத்து வருவதாக அறிந்தோம். செய்துங்கநல்லூர் மற்றும் சுற்று பகுதியில் மேலும் கிடப்பில் கிடக்கும் பணிகளை செய்ய இவர் முயற்சி செய்து வருகிறார். இந்த வேளையில் உதவி மின்பொறியாளரை இட மாற்றம் செய்தால் இங்குள்ள பணிகள் பாதிக்கும். எனவே உதவி மின்பொறியாளர் சுரேஷ் குமாரை இடம் மாற்றம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் போராட்டம் நடத்துவோம் – செய்துங்கநல்லூர், விட்டிலாபுரம், கருங்குளம் மற்றும் சேரகுளம் சுற்று வட்டார பொதுமக்கள்.


