தூத்துக்குடியில் வருகிற 17ம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 17-05-2022 அன்று காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிப்பிக்கூடத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


