மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் ஆத்தூர் வீரபாகு திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் மரு. செந்தில் ராஜ் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13 ந்தேதி வெள்ளிககிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 5000 துணிப்பைகள் வழங்குதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் 5000 இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவை து£த்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மரு.கி. செந்தில்ராஜ் தலைமை தாங்கி 5 ஆயிரம் மஞ்சள் துணிப்பையை வழங்கி, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு சம்பந்தமான ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் 5000 இலவச மரக்கன்று கள் வழங்குதல் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்து£ர் வட்டாசியர் அ. சுவாமிநாதன் , ஆத்து£ர் பேரூராட்சி தலைவர் ஏ.கே. கமால்தீன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். ஆழ்வார்தோப்பு நிர்வாக கிளை மேலாளர் ஏ. வேல்முருகன் வரவேற்புரையாற்ற உள்ளார். கிராம உதய நிறுவனரும் இயக்குநருமான வி. சுந்தரேசன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆத்து£ர் பேரூராட்சி துணைத் தலைவர் எம். மகேஸ்வரி முருக பெருமாள், வழக்கறிஞரும், கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ். புகழேந்தி பகத்சிங், கிராம உதயம் தன்னார்வ தொண்டர் எஸ். ராமச்சந்நிரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். கிராம உதயம் பகுதிப் பொறுப்பாளர் கே. ஆரிய நாச்சியார் நன்றியுரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கிராம உதயம் தொண்டு நிறுவனம் தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள்.


