சாத்தான்குளம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ராஜு தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் வர்த்தச
சங்க கட்டிடத்தில் வைத்து வியபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜூ தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .இதனை வியாபாரிகளே உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் புகையிலை
பொருள்கள் விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதை மீறி புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதில் வியாபாரிகள் கலந்து கொண்டனர்


