சாத்தான்குளம் அருகே சுடுகாட்டில் பதுக்கிய 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள விஜயனூர் பகுதியில் உள்ள சுடுகாட்டின் பின்புறம் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பதுக்கி வைக்கப்பட்ட மூடைகளை திசையன்விளை உள்ளிட்ட பிறபகுதிக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வருடம் இதேபோல் விஜயனூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 ரேசன் அரிசி மூடைகளை வருவாய்த் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


