அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் அத்திமரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அரசு நிர்ணயித்த விலையில் எளிதாக விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்டின் வினு, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, விவசாயிகள் சங்கத் தலைவர் பூபதி நாடார், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத் தலைவர் திருமால் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


