ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் எவ்வாறு பர வியது என்பது பற்றிய விவரங்கள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. கிறிஸ்தவம் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதற்கு முன்னேயே தமிழகத்தில் தோன்றிவிட்டது என்பதும், ஆரம்பகாலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டான் என்பதும் போன்ற ஆச்சரிய தகவல்களும் கூறப்பட்டுள்ளன. கி.பி.52-ம் ஆண்டில் மலபார் பகுதிக்கு வந்த கிறிஸ்தவம், பல ஆண்டுகளுக் குப் பிறகு எவ்வாறு நெல்லைச் சீமையில் பரவி யது என்ற வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளது. சீகன்பால், பிரிடெரிக் சுவார்ட்ஸ், கோகிலாவாக இருந்து கிளாரிந்தா அம்மையார் ஆனவர், தாவீது சுந்தரானந்தர், கால்டுவெல் உள்ளிட்ட ஒவ்வொருவரும் கிறிஸ்தவ மதப் பணிக்கு ஆற்றிய சேவைகளும் ஆவணம் போலப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெல்லைச் சீமையில் கிறித்தவம்
முத்தாலங்குறிச்சி காமராசு
பக்கம்277/-
விலை 300/-
பொன் சொர்ணா பதிப்பகம்
8760970002,9442834236


