ஜெய்கணேஷ் (1946 – பெப்ரவரி 11, 2001) தமிழ்த்திரைப்பட நடிகர். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். பொறியாளரான அவர் அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, அதிசயப் பிறவி முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார். இயக்குனர் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், சுமித்ரா, ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், படாபட் ஜெயல ட் சுமி, சத்யபிரியா, ஜெயமாலினி, அனுராதா, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராதிகா, ரேவதி, விஜய், அஜீத் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். ஜெய்கணேஷ் பெப்ரவரி 11, 2001ல் தன் 54ம் அகவையில் புற்றுநோயால் இறந்தார்