கோவில்பட்டியில் மயானம் அருகே அரிவாளுடன் பதுங்கியிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார் நடராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நடராஜபுரம் மயானம் அருகே நின்று கொண்டிருந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டபோது அவர்கள் முதுகில் சட்டையில் அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் நடராஜபுரம் 5 ஆவது தெருவைச் சேர்ந்த சின்னப்பாண்டி மகன் கார்த்திக் என்ற கோழி கார்த்திக் (21), காந்திநகர் பாலன் தெருவைச் சேர்ந்த ஆறுமுக பாண்டியன் மகன் சூரியகுமார் (23) என்பது தெரியவந்தது. இருவர் மீதும் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து 2 இளைஞர்களையும் கைதுசெய்து, அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.


