புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தன்னார்வளர்களுக்கான பாடப்பொருள் பயிற்சி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் நடந்தது.
இந்த பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கற்போர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி, கற்போர் மையங்களை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
பயிற்சியை பார்வையிட்ட தூத்துக்குடி கல்வி மாவட்ட தொடக்க நிலை உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு ஆகியோர் தன்னார்வலர்களிடம் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலைமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், மரியஜெயசீலா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் இராஜேந்திரன், பீபேகம், வட்டார இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப்வில்சன்ராஜ் ஆகியோர் செயல்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவசங்கரி, வெயில்முத்து, திருமதி. மகாராணி கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை
வட்டார வளமைய மேற்பார்வையார் திருமதி. ஜெயமேரி அற்புதம் செய்திருந்தார்.


