செய்துங்கநல்லூரில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் இனோஸ்குமார். இவர் ஸ்ரீவைகுண்டம் சர்க்கிளில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். தற்போது நெல்லை மாவட்டம் தேவர் குளம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது இன்ஸ்பெக்டராக பணி உயர்வு பெற்றுள்ளார். அவரை செய்துங்கநல்லூர் பகுதி மக்கள் உள்பட பலர் பாராட்டினர்.


