மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இடிமுடி பெருவிழா வருகிற டிச.4ஆம் தேதி தொடங்கி 2027 ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இருமுடி விழாவில் தென் மாவட்டங்களில் இருந்தும், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சக்திமாலை அணிந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி – சென்னை இடையே தற்போது ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. தூத்துக்குடி – சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு நிரம்பி வழிகிறது. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனால் முதியவர்கள், பெண்கள் உட்பட பயணிகள் அனைவரும் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு முத்துநகர் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்காக பல்க் டிக்கெட் புக் செய்து விடுகின்றனர். மறுநாள் திரும்ப வருவதற்கு டிக்கெட் புக் செய்ய சென்றால் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் வந்து விட்டது என்று கவுண்டரில் கூறுகின்றனர். இதனால் முந்தைய நாள் புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்து திரும்பப் பெறும்போது ஏராளமான பணம் விரயம் ஆகிறது.

எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.