தேசிய காசநோயற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவின் சார்பாக காசநோயாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுந்தரி அவர்கள் தலைமையில் 10.03.2022அன்று முற்பகல் 10.30 மணியளவில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது. வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹிம் ஹீரா* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுந்தரி அவர்கள் காசநோயாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ்அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 514758 பொங்கல் பரிசுத் தொகுப்பில், 506242 பொங்கல் பரிசுத் தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு, மீதமுற்ற 8516 பொங்கல் பரிசுத் தொகுப்பு பையானது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள், காசநோயினால் சிகிச்சை பெறும் நோயாளர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள், நாட்பட்ட சிறுநீரக நோயினால் சிகிச்சை பெற்று வரும் நபர்கள், முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்கிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் *டாக்டர்.கி.செந்தில்ராஜ்,* இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட 20 காசநோயாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார்.
இறுதியாக நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் ஐயம்மாள் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.