எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிபரணி நதிப்பகுதியில் உள்ள வரலாறுகள் குறித்து எழுதிய தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலை ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைமை வகித்து சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


