கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டியபட்டினம் கிராமத்தில் மீனவர்கள் அதிகமாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது கடலின் சீற்றம், காற்று, இடி மின்னல், போன்ற சீற்றங்களில் மட்டுமன்றி சட்டத்திற்கு புறம்பாக உள்ள செயல்பாடுகளிலும் செயல்படும் சூழலுக்கு சில மீனவர்கள் உள்ளாகிறார்கள். குறிப்பாக சட்டத்திற்கு புறம்பான பொருட்களை கடத்தி வருவது, பிற நாடுகளை சார்ந்த நபர்கள் கடல் வழியாக கடற்கரையை வந்து அடைவது போன்ற நடவடிக்கைகளில் தங்களை அறியாது செயல்படுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குளச்சல் கடலோர பாதுகாப்பு துறையை சார்ந்த உதவி ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் சுமார் 40 மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


