தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ரூபா தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் மதுரவல்லி முன்னிலை வகித்தார். சார்ட்டரேட் அக்கௌன்ட் பிரான்சிஸ் அமல் ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகள் பதவியேற்பை தொடர்ந்து அனைத்துத் துறைகள் சங்கங்கள் மற்றும் மன்ற பிரதிநிதிகள் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தனர். விழா ஏற்பாட்டினை ஆங்கிலத் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் செய்தனர்


