மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழிப்புணர்வு மாநாட்டில்பெண்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், உறுதுணையாகயிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நடந்த உலக மகளிர் தின விழிப்புணர்வு மாநாட்டில் மகளிரின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை,மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாநாடு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அனைவரையும் வரவேற்றார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அதிகாரி சு. ரதிதேவி தலைமை தாங்கி பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு பரிசுமற்றும் மரக்கன்றுகளையும் வழங்கி வாழ்த்தி பேசினார்.புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை பாதுகாப்பு அலுவலர் தோ. செல்வ மெர்சி கருத்துரை வழங்கினார். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தினமும் 36 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்கும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய வணிக நுண் நிறுவனங்களை தொடங்கியமைக்கு,மேலும் 4 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 21 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கியமைக்கும் மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3 ஆயிரம் கோடிகடன் தள்ளுபடி வழங்கியமைக்கும், பெண்கள் அதிகாரத்தை உறுதி செய்ய உள்ளாட்சிகளில் அதிக இட ஒதுக்கீடு கொடுத்தமைக்கும், பணிபுரியும் பெண்களுக்கு 9 மாத பேறுகால விடுப்பை 12 மாதமாக உயர்த்திமைக்கும்இதுபோன்ற போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் புன்னக்காயல் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாதவன்,குனான்ஸ்,மெல்போரா,செல்வி மற்றும் வளர் இளம் பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .முடிவில் புன்னக்காயல் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சுரேஜா நன்றி கூறினார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்