தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது கிளாக்குளம். கருங்குளத்தில் இருந்து கிளாக்குளம் வழியாக பேய்க்குளம் செல்ல இங்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழியாக செல்லும் சாலை திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதை செல்கிறது. இதனால் இந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
ஆனால் சுரங்கப்பாதை அருகே வாய்க்கால் செல்வதால் சுரங்கப்பாதையில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இந்த ரயில்வே பாதை அருகே ஏற்கனவே இருந்த மங்கம்மாள் சாலை புதுப்பிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலைகள் அமைக்கும் போதே பணிகள் சரியில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் சாலை பணிகள் முடிக்கப்பட்டது.
ஆனால் ஒரு மாத காலம் ஆவதற்குள் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சிறிய அளவிலான வாகனம் சென்றால் கூட சாலைகள் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பல இடங்களில் சாலைகள் முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, சாலை அதிக அளவில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில் புதிதாக அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.


