தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தன்னார்வலர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் நீர்நிலைகள் மற்றும் தரைப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வசிக்கும் நீர் பறவைகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் வனத்துறை அலுவலர்கள் பறவை ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர் இந்த கணக்கெடுப்பில் தமிழகத்தில் உள்ள நீர்ப்பறவைகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய நீர்ப்பறவைகள் ஆகியவை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் கோரம்பள்ளம் குளப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பு பணியில் கடந்த ஆண்டு விட கூடுதலாக பறவைகள் இருப்பது தெரியவந்தது அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் கருப்பு அரிவாள் மூக்கன், நீல தாளை கோழி கோழி சாம்பல் நாரை, பாம்பு தாரா ,செந்நிற நாரை சின்னான், உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.


