தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 4 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 25 மனுதாரர்கள் என மொத்தம் 29 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


