வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் சமேத திருமூலநாதர் திருக்கோவிலில் பானு சப்தமி பூஜை விழா நடந்தது. மார்கழி மாத ஞாயிறு பானு சப்தமி என்பது பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு முறை வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் சிவாலயங்களில் உள்ள சூரியனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் நோய் நொடி இல்லாமல் உலகில் உள்ள அனைவரும் வாழலாம் என ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகின்றனர். இதன்படி உலக மக்களைக் கடந்த இரண்டு வருடங்களாக ஆட்டிப் படைக்கும் கொரோனா ஒமிக் ரான் நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலில் பானு சப்தமி பூஜை விழா நடந்தது. கோவிலில் உள்ள சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் நெல்லை மாருதி சேதுராமலிங்கம் வல்லநாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் பொன்பா தர் வெள்ளை பா.ஜ.நகர்ப்புற ஊரக வளர்ச்சிப் பிரிவு மாவட்டச் செயலர் பரமசிவன் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து தெய்வநாயகம் பிள்ளை மணக்க கை மாரிமுத்து உட்பட பொதுமக்க ளும் சிவனடியார்களும் திரளாகக் கலந்து கொண்டனர். பூஜைகளை சண்முக சுந்தர பட்டர் சந்தோஷ் பட்டர்நடத்தினர்.வேல் கம்பர் குழுவினரின் பாணி வாத்ய இசை முழக்கம் நடந்தது. ஏற்பாடுகளை திருமூலநாத சுவாமி பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்


