ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் ஜெகன் மற்றும் சிவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தூத்துக்குடி மற்றும் தேரேஸ்புரம் பகுதியை சார்ந்த மீனவர்கள் பங்குபெற்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் மற்றும் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் மீன்பிடி துறைமுகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை பசுமை இயக்கம், வள்ளியூர் இயக்கத்தின் தலைவர் சித்திரை அவர்கள் வழங்கினார். இதில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை பணியாளர்கள் சுமார் 40 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


