
இவர் தான் R.K. பக்கிள் துரை இவர் யார் ?
இவர் என்னென்ன சாதனை செய்தார்
இவர் ஆங்கிலேயர் காலத்தில்
திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர்
இவரது பணி காலம் 6 வருடங்களே
1866 முதல் 1868 வரையிலும்
1870 முதல் 1874 வரையிலுமாகும்
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில்
சட்டவிரோதமாக செயல்பட்ட
காரியங்களை தடுத்து நிறுத்தினார்,
தாமிரபரணி ஆற்றில் இருந்து
வடகால் , தென்கால் என்று இரண்டு
பிரிவாக தண்ணீரை பிரித்து , அநேக
கிராமங்களில் விவசாயத்தை
மேம்படுத்தினார், திருவைகுண்டம்
ஆற்றில் பாலத்தை கட்டி,அணையை
கட்டினார், இவரது முயற்சியால்
தூத்துக்குடியில், ஓடையை மிகவும்
நேர்த்தியாக உருவாக்கினார்
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல்
என்ற ஊரில் குளத்தை கட்டினார்
தூத்துக்குடியில், உப்பாத்து ஓடை
என்ற ஓடையை அமைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் ,கூட்டாம்புளி
குலையன்கரிசல்,சிவஞானபுரம்
சேர்வைகாரன் மடம் , புதுக்கோட்டை,செவத்தையாபுரம் ,
கிராமங்களில் வசித்து வந்த மக்கள்
தங்கள் குழந்தைகளுக்கு
பக்கிள்துரை, மற்றும் துரை என்ற
பெயர் சூட்டியுள்ளார்கள்
இவ்வளவு நல்ல காரியங்களை
திறம்பட செய்த கலெக்டர் ஐயா
R.K. பக்கிள் துரை அவர்களை
நாம் என்றும் நினைவு கூறுவோம்