கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி, திருச்செந்தூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


