கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி – EB காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார். விழாவில், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் முருகேசன், இராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


