ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை சார்பில் மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தலைமையில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா வைத்து நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜனகர் மரக்கன்று நடவுப் பணியை துவக்கி வைத்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஸ், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி,ராஜா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரா ராணி, காசாளர் கு.கங்கா, மற்றும் அலுவலக பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர். பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் மரக்கன்றுகள் நடவுப்பணியை மேற்கொண்டனர்.


