தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பகப் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன கருவியினை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழக அரசால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட மார்பக புற்றுநோய் பரிசோதனை கருவி (MAMMOGRAM) மற்றும் MAMMOGRAM FILM READER ஆகிய இயந்திரங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றது. இந்த இயந்திரத்தின் மூலம் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோயை மிகவும் துல்லியமாக கண்டறியலாம். இந்த மூலம் இயந்திரத்தின் அநேக உள் மற்றும் வெளிநோயாளிகள் பயனடைவார்கள்.
இதன் தொடக்க விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு MAMMOGRAM இயந்திரத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி, நுண்கதிர் துறைத் தலைவர் புளோரா ஜீனைட்டா, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் குமரன், உதவி உறைவிடமருத்துவ அலுவலர்கள், நுண்கதிர்துறை மருத்துவர்கள் மற்றும் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


