தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் ஹை மாஸ் விளக்கு அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சந்திப்புகளில் சாலைகளை விரிவுபடுத்தியும் இரவிலும் ஓளிரும் உயரம் குறைவான ஹை மாஸ் விளக்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றது. அதின் ஓரு பகுதியாக கலைஞர் அரங்கம் அருகில் உள்ள சந்திப்பிலும் சாலை விரிவாக்கம் செய்து விளக்கு அமைக்க மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அப்பகுதியை மேயர் பார்வையிட்டார். இப்பணிகளினால் பொதுமக்கள் எளிதாக நான்காம் கேட் இருந்து விவிடி சிக்னல் வரை செல்லும் சாலையை சென்றடைய முடியும் என்று மேயர் தெரிவித்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.


