தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வெற்றிவேல்புரம், மேட்டுப்பட்டி, சங்குகுளி காலனி, ராஜீவ் காந்திநகர் கிருஷ்ணராஜபுரம் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதியில் புதிய வழித்தடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் பணிகளையும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தெற்கு புதுத்தெரு பகுதியில் புதிய தார்சாலை அமைத்து ெகாடுத்த பணிகளுக்காகவும் மீகா தெரு தெற்கு புதுத்தெரு பகுதிகளுக்கு சீரான குடிநீா் வழங்குவதற்காக புதிய வழித்தடத்தில் குழாய் பதித்து குடிநீர் வழங்கியதற்காகவும் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா கவுன்சிலர் மும்தாஜ், நன்றி தொிவித்துக்கொண்டனர். ஆய்வின்போது மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், வட்ட பிரதிநிதி மார்ஷல், நிர்வாகிகள், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.


