சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஒன்றிய செயலர் ஆ. பாலமுருகன், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனிடம் புதன்கிழமை ஒப்படைத்தார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திமுக துணை பொதுச் செயலர் கவிஞர் கனிமொழி கருணாநிதிஎம்பி, ஆலோசனை படியும், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், தெற்கு மாவட்ட திமுக செயலர் அனிதாஆர். .ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்துக்கு தலைமை கழகத்தால் புதிய உறுப்பினர் 6100 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்டகாலத்தில் 6400 புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்து அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனிடம், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலர் பாலமுருகன், அதன் படிவத்தை புதன்கிழமை ஒப்படைத்தார். அப்போது அவருடன் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ,தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின் , மாவட்ட இளைஞர் அணி செயலர் ராமஜெயம், தெற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரெனிஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


