2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் குடியரசு தின விழாவின் போது கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் பொருட்டு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது.
2027 ஆம் ஆண்டிற்கு தகுதியான நபர்களின் கருத்துரு பெறுவதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தகுதியான நபர்களின் கருத்துருக்கள் 31.07.2026 -க்குள் கீழ்க்கண்ட விதிமுறைகளில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. தனியரின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான சாதனைகள் தொடர்பாக ஒரு பக்க அளவில் இருத்தல் வேண்டும் (தமிழில் – மருதம் மற்றும்
ஆங்கிலத்தில் – VERDANA)
மேற்கண்ட சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தாங்கள் புரிந்த சாதனைகளை கீழ்க்கண்டவாறு புத்தக வடிவ கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 நகல்களை தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
• பொருளடக்கம் (ம) பக்க எண் (INDEX)
• இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுயவிவரம் (Bio data) மற்றும் Passport Size Photo -2
• தனியரின் சாதனைகள் தொடர்பாக ஒரு பக்க அளவில் இருத்தல் வேண்டும் (தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் (VERDANA)
31.07.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி- 628 101 என்ற அலுவலக முகவரியில் உடனடியாக சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.


