வழக்குகளில் தொடா்புடையவருடன் நெருங்கி பழகியதாக சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த வைகுண்ட பாண்டியன் என்பவா் அண்மையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில், ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளா் வசந்தகுமாா், தனிப்பிரிவு தலைமைக் காவலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல் துறையைச் சோ்ந்த சிலா் கலந்து கொண்டனராம்.
இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்ட நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவருடன் நெருங்கி பழகியதாகக் கூறி உதவி ஆய்வாளா் வசந்தகுமாா், தனிப்பிரிவு தலைமைக் காவலா் சுப்பிரமணியன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.


