
திருநெல்வேலி மாவட்டம்,தெ.கள்ளிகுளம், திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் த.நிர்மலா அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சூரியனின் விடியல் விருதுகள் – 2022 இல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கையெழுத்திட்ட *மொழிச் செம்மல் விருது* வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேசன், குமரி தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், திண்டுக்கல் சுபம் கம்பன் கழகம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட தளபதியின் பொற்கால விருதுகள் – 2022 இல் *செம்மொழிச் செல்வர் விருதும்* வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவரது கல்வி மற்றும் தமிழ்ப் பணியினைப் பாராட்டி இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகள் பெற்ற இவரைக் கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர். மேலும் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் திரு முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களும் இவரைப் பாராட்டினார்