உடன்குடியில் டிக்டாக் புகழ் ஜிபி.முத்து உதவியாளர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
டிக் டாக் மற்றும் பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வட்டார மொழியில் பேசிபுகழ் பெற்றவர் ஜிபி.முத்து. இவரது உதவியாளராக தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் வடக்குதெருவை சேர்ந்த அய்யம் பெருமாள் மகன் செந்தில்குமார் (37) என்பவர் பணியாற்றி வந்தார்.
திருமணமாகாத இவர், சமீபத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் அவர் நேற்று மாலை வீட்டில்தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் சென்று உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


